Monday, August 25, 2014

கருப்பண்ணசுவாமி வரலாறு


தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்பண்ணசுவாமி அருள்பாலித்து வருகிறார். கருப்பண்ணசுவாமி இல்லாத கிராம கோயில்களே இல்லை என கூறும் அளவிற்கு இந்த கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார்.(wikipedia)
அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. 

நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கருப்பண்ணசுவாமி . பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.
பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.


வரலாறு


  ஈரோடு மாவட்டம்,பவானி வட்டம் ஓடத்துறை கிராமத்தைச் சேர்ந்த அழகிய சிற்றூரான பாலப்பாளையத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சங்கோதி கருப்பண்ணசுவாமி திருக்கோவில்.
கோவில் பங்காளிகளின் சீரிய முயற்சியால், 2002 ஆம் ஆண்டு ,சிறு குடிலாக இருந்த இடத்தில், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருக்கோவில் அமையப்பெற்று,திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆடித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


 
ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள்:
  • அருள்மிகு. சங்கோதி கருப்பண்ணசுவாமி 
  •  அருள்மிகு கன்னிமார் 
  • அருள்மிகு புடவைக்காரி அம்மன் 
  • அருள்மிகு செல்வ  விநாயகர்  
****************